Header Ads



மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம், 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


காலநிலை குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம்விடுத்துள்ளது.


இதற்கமைய இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்றுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்தந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்றுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதேவேளை மக்களை மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் என்றும் வீட்டிற்குள் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

1 comment:

  1. மின்னல் அதிகரிக்கும் போது மரத்தின் கீழ் யாரும் இருந்தால் அவர்களை மின்னல் தாக்கி மரணமடையும் வாய்ப்புகள் அதிகம். அதுவும் மின்னலைத் தடு்ப்பதற்கு பிரித்தானிய காலத்தில் நிறுவப்பட்டிருந்து பல்வேறு கருவிகளும் உபகரணங்களும் கலட்டப்பட்டு விற்கப்பட்டுக் கொண்டிருப்பதால் முன்னைய விட தற்போது மரங்களுக்கு அடியில் மின்னல் ஆபத்து மிக அதிகம். அதனால் தான் வானிலை அவதான நிலையமும் பொதுமக்களை இடிமின்னலின் போது மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்றது. அந்த எச்சரிக்கையை குறிப்பாக கிழக்கு வட மாகாணங்களில் வயல் வௌிகளில் தங்க வேண்டி ஏற்பட்டால் அவர்கள் அருகில் உள்ள குடில்கள், பாதுகாப்பான தளங்களில் தற்காலிகமாகத் தங்குவதை விட்டு இலகுவாக என்ன காரணங்கள் கொண்டும் மரங்களின் கீழ் தங்கி உயிர் ஆபத்துக்களையும் தாங்களாகவே வரவழைத்துக் கொள்ள வேண்டாம் என குறிப்பாக விவசாயிகள், வெட்ட வௌியில் பணியாற்றுபவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.