UAE இல் இருந்து வந்த பெண் 11 கோடி ரூபா, பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 11 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இந்தியாவின் சென்னை ஊடாக இன்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
பெண்ணின் பயணப்பையை சோதனையிட்ட போது, அதில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கரட் தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் கை வளையல்கள், 24 கரட்டிலான 27 தங்கத் தகடுகள், 08 தங்க வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த பெண்ணிடமிருந்து 04 கிலோ 892 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹாவை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.
Post a Comment