Header Ads



"யாரையும் உங்களை இழிவாகப் பார்க்க விடாதீர்கள்" - வலது கையின்றி பிறந்த குழந்தை 11 வயதில் சொந்தத் தொழிலை நடத்தி சாதனை


அப்போது அவரின் 2ஆவது குழந்தை மோஸா அலைக்கா பைஹாக்கியைக் (Moza Alyka Baihakki) கருவில் சுமந்திருந்தார் நோர்.


பரிசோதனையில் குழந்தை Amniotic Band Syndrome என்ற நோயால் பாதிக்கப்பட்டதால் அதன் வலது கை உருவாகவில்லை என்று நோருக்குத் தெரியவந்தது.


குழந்தையால் இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா? அவளுக்குச் சிறப்புத் தேவைகள் இருக்குமா? மூளை வளர்ச்சி பாதிக்கப்படுமா? எனப் பல கேள்விகள் நோரின் மனத்தில் அலைமோதின.


குழந்தைக்கு வலது கை இல்லையென்றாலும் அதன் ஆரோக்கியத்தில் குறையில்லை என்று மாதர்நல மருத்துவர் நோரிடம் கூறினார்.


மோஸா பிறந்தபின் அவளின் பலத்தைக் கண்டு வியந்தார் நோர். அன்று முதல் அவளைச் சாதாரணக் குழந்தையைப்போல வளர்க்க நோரும் காற்பந்து வீரரான அவரின் கணவர் பைஹாக்கி கைஸானும் (Baihakki Khaizan) முடிவெடுத்தனர்.


"நீந்துவது, Ballet ஆடுவது, பியானோ, வயலின், கித்தார் வாசிப்பது ஆகியவற்றைப் பயில விரும்பினாள் மோஸா. இன்று அவர் தன் இடது கையையும் வலது புறத்தையும் வைத்து தன்னம்பிக்கையுடன் நீந்துகிறார், பியானோவையும் வாசிக்கிறார்" என்றார் நோர்.


11 வயதில் மோஸாவுக்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் மீள்திறனையும் கண்டு தொழில் தொடங்கக் கற்றுத்தர முடிவெடுத்தார் நோர்.


தொழில் தொடங்கும் யோசனையை மோஸாவிடம் கூறியபோது அவர் உற்சாகத்தோடு அதற்கான 4 அடையாளங்களை வரைந்து அதில் ஒன்றை இருவரும் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார் நோர்.


தொழிலை வளர்க்க யோசனைகளையும், முதலீட்டுக்குத் தேவைப்படும் தொகையையும், விற்பனை மூலம் பெறக்கூடிய லாபத்தையும் தமது பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டார் மோஸா.


Instagram, TikTok தளத்திலும், வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களிடமும் உபகரணங்களை விற்பனை செய்ததில் 3,000 வெள்ளிக்கும் அதிகமான லாபத்தை ஈட்டினார்.


கிடைத்த லாபத்தை வைத்தும் பெற்றோரிடமிருந்து பெற்ற முதலீட்டை வைத்தும் தொழிலை விரிவாக்க முடிவெடுத்தார் மோஸா.


தற்போது Moza Aesthetics அழகு நிலையத்தின் ஒரு பகுதியில் தமது தொழிலை நடத்தி வருகிறார்.


"என்னைப் போலத் தனித்துவமிக்க திறன் கொண்டவர்களுக்கு நான் கூற விரும்புவது: யாரையும் உங்களை இழிவாகப் பார்க்க விடாதீர்கள். நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதையும் உங்களுக்கென சிறப்பான செயல்முறைகள் உள்ளன என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள்" என்கிறார் மோஸா.


ஆதாரம் : CNA

No comments

Powered by Blogger.