நான் அரசாங்கத்தில் இல்லை, தேர்தலை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கத்திடம் விசாரியுங்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சாரப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று -24- விஜயம் செய்தார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய பசில் ராஜபக்ஸ,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் 252 உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு போன்ற ஏனைய பிரதேசங்களில் கட்சி கூட்டணியாக போட்டியிடும்” என்றார்.
தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் வினவிய போது,
“அது அரசாங்கத்திடம் விசாரிக்கப்பட வேண்டும், மேலும், "நான் அரசாங்கத்தில் இல்லை" என்றார்.
இந்த நாட்டை நாம் தற்போது எதிர்நோக்கியுள்ள இழிவுக்கும் வறுமைக்கும் முதல் காரணம் இந்த கள்ளனின் பளவும் சுரண்டலும், வியாபாரிகளிமிருந்து பலாத்காரமாகப் பெற்ற கப்பமும்தான். இவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த நாட்டில் யாரும் முதுகெழும்பு உள்ள இலங்கையர்கள் இருக்கின்றார்களா என பொதுமக்கள் மிகவும் கவலையுடன் வினவுகின்றனர்.
ReplyDelete