இலங்கையில் அரியதொரு நிகழ்வு - உங்கள் வாழ்த்துகளையும் வழங்குங்கள் (படங்கள்)
மன்னார் சிலாவத்துறை பாடசாலையில் இன்று 14-01-2023 மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.
இதில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவனோடு, அவரது தந்தையான யூசுப் இர்பான், இணைந்து ஓடுவதையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்.
ஓட்டப்போட்டி எல்லையை அடையும் வரை தந்தையும் ஓடினார்.
சாதாரண ஏழைக் கடற்றொழிலாளியான யூசுப் இர்பான், தனது மகனுக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு, மகன் உச்சம் தொட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடே ஆகும்.
இரண்டு பேருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
Post a Comment