Header Ads



இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சர்ப்ராஸ் கான் - தேர்வு கமிட்டியை கடுமையாக சாடும் கவாஸ்கர்



இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் தற்போது அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. டி20 அணியில் சமீபகாலமாக முன்னணி வீரர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. மேலிம் இந்திய டி20 அணியை ஹர்த்திக் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார்.


நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நிறைவடைந்ததும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.


இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டில் பங்கேற்க முடியும் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு கமிட்டியால் கடந்த சில தினக்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.


இந்த அணியில் சமீபகாலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ப்ராஸ் கான் இடம் பெறாதது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணியில் இடம் பெறாதது குறித்து சர்ப்ராஸ் கானும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.


இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு கமிட்டியை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,


சர்ப்ராஸ் கான் சதம் அடித்த பின்னர் அவர் களத்தில் இருந்து வெளியேறாமல் மீண்டும் களத்தில் இறங்கி ரன்களை அடிக்கிறார். அனைத்து வித்தத்திலும் அவர் கிரிக்கெட்டுக்கு தகுதியானவர் என்பதை இது காட்டுகிறது.


நீங்கள் (தேர்வு கமிட்டி) மெலிதான மற்றும் ஒல்லியான வீரர்களை மட்டுமே தேடுகிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் ஒரு பேஷன் ஷோவிற்கு சென்று சில மாடல்களை தேர்ந்தேடுத்து அதன் பின்னர் அவர்கள் கையில் பேட் மற்றும் பந்தை கொடுத்து அவர்களை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


உங்களிடம் அனைத்து வடிவங்களிலும், அளவுகளிலும் வீரர்கள் உள்ளனர். ஒரு வீரரின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், அவர் எடுத்த ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை கருத்தில் கொள்ளவும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.