Header Ads



தொழில்நுட்பக் கோளாறால் அமெரிக்கா முழுவதும், விமான சேவைகள் பாதிப்பு


அமெரிக்காவில் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 


விமானத்தின் பாதையில் ஆபத்து விளைவிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கும் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம்(FAA) கூறியுள்ளது. 


அந்த அமைப்பின் சில செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாலும் தேசிய விமான போக்குவரத்து கட்டமைப்பின் செயல்பாடுகள் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே இருப்பதாக எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது- 


தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதா என்பது குறித்த விவரம் முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 


அனைத்து விமான நிறுவனங்களின் விமான சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கன் ஏர் விமான நிறுவனம் கூறியுள்ளது. 


எஃப்.ஏ.ஏ.விடம் இருந்து கூடுதல் விவரம் கிடைக்கும் வரை அனைத்து உள்நாட்டு விமானங்களும் தாமதமாகவே இயக்கப்படும் என்று யுனைட்டட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 


அமெரிக்கா முழுவதுமே விமான சேவைகளில் தாமதம் இருப்பதாக விமானப் பயணிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.