Header Ads



சவூதி கிளப்பில் சேருவது குறித்து மிகவும் யோசித்து, சரியான ஆய்வுக்கு பிறகே முடிவை எடுத்தேன் - ரொனால்டோ


கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது விளையாட்டின் எதிர்காலம் குறித்து சரியான முடிவை எடுத்ததாக உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.


சவுதி அல் நாசர் விளையாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட்டுக் கழகத்திற்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டதுடன், கால்பந்தாட்டத்தின் ஆதிக்கம் இன்று பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை இழந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக இந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஆசிய நாடுகளின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தென் கொரியா, மொராக்கோ போன்ற நாடுகளின் ஆட்டம், உலகக் கோப்பையின் போது ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் செயல்பாடு கால்பந்தாட்டத்தில் பிரகாசமான எதிர்காலத்திற்கான அறிகுறிகளை காட்டுகின்றது.


மேலும் பேசிய ரொனால்டோ, அரபு கால்பந்து கிளப்பில் சேருவது குறித்து என்ன கருத்து இருந்தாலும், மிகவும் யோசித்து, சரியான ஆய்வுக்கு பிறகே இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.


ஐரோப்பாவில் கால்பந்து விளையாட்டில் பெறக்கூடிய அனைத்து விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளதாகவும், ஐரோப்பிய பிராந்தியத்தில் தனக்கு இனி எதுவும் கிடைக்காது என்றும், ஆசியாவில் உள்ள விளையாட்டுக் கழகத்திற்கு தனது விளையாட்டு அறிவையும் திறமையையும் கொடுத்து வழங்குவதாகவும் கூறியுள்ளார்.


சவுதி அல் நாசர் விளையாட்டுக் கழகத்தில் இணையும் ரொனால்டோவின் முடிவால், சவுதி கால்பந்து லீக்கில் முன்னணி விளையாட்டுக் கழகமான அல் நாசர் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


ரொனால்டோவின் வருகையை காண இன்று அல் நாசர் மைதானத்தில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் திரண்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.