Header Ads



உள்ளூராட்சி சபைத் தேர்தலில், பொதுஜன பெரமுனவே வெற்றிவாகை சூடும் - நாமல்


உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிவாகை சூடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், "உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் தயார்ப்படுத்தலில் மொட்டுக் கட்சி ஈடுபட்டுள்ளது.


வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. மொட்டுக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடும் கட்சிகள் தொடர்பான பேச்சுகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.


தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்த திகதிக்குள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வோம்.


நீதிமன்றத்தின் தடை உத்தரவு எதுவும் இன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் மொட்டுக் கட்சியே வெற்றியடையும்" என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த நபரின் பேச்சை அவதானிக்கும் போது இரண்டு மிக முக்கியமான விடயங்கள் தௌிவாகின்றன. முதலில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடந்தால் அதில் வெற்றிவாகை சூடுவது மொட்டுக்கட்சி, ஏனெனில் அதற்கான சட்டவிரோதமான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம். இப்போது தோல்வி காண்பதற்கு கபுடாஸ் எங்களோடு இல்லை. அடுத்தது, நீதிமன்ற விடயங்களை பின்கதவால் செய்து முடித்து விட்டோம். எனவே இறுதி நேரத்தில் தேர்தலை நீதிமன்றம் மூலம் நிறுத்தும் நடவடிக்கை சாத்தியமானால் எங்களால் செய்ய ஒன்றுமில்லை. எங்கள் களவுகளும், மோசடிகளும் தொடரும்.எங்கள் தலைவர் ர.ராஜபக்ஸா அவர்கள் எங்களுக்கு எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த தொடர்ந்தும் எங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார். எனவே எப்போதும் நாங்கள் தான் வெற்றியாளர்கள்.இந்த கெட்டுப் போன கஞ்சிப்பானையை எந்த அசுத்தப் பெட்டிகளும் உள்வாங்கத் தயாராக இல்லை என்பது தான் ஒட்டுமொத்தமான உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.