Header Ads



கனடா பிரதமரின் பிடிவாதமும், மஹிந்தவின் மனவேதனையும் ..!


கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் இலங்கைக்கு இரட்டை அடிகளை கொடுத்ததாக நே செய்தித்தாள் ஒன்று கூறுகிறது . 


கனடாவில் , ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் கடிதத்தலைப்பில் , அவர் கையெழுத்திட்டார் . 


அத்துடன் அவரது அரசாங்கம் , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ , கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கும் பொருளாதாரத் தடைகளை விதித்தது . 


முன்னதாக இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டபோதும் , கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவிக்கின்றன .


சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல . அப்போது தலைமை வகித்தவர்களும் இந்த தடையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .


 எவ்வாறாயினும் , முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ , அவர் குறிப்பிடப்பட்ட விதத்தில் கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் . 


உள்ளூரில் கூட , அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை அல்லது எந்தவொரு நீதித்துறை அமைப்பும் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார் .


ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு ஆகிய இரண்டும் அவ்வாறானதொரு நடவடிக்கைக்கு எதிராக திறம்பட செயற்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார் . 

1 comment:

  1. மஹிந்த மஹத்தயா அவர்களே, வௌிநாடடு அமைச்சர் உங்கள் சின்ன மச்சான் தானே, ஒட்டாவாவின் இலங்கைத்தூதுவரும் கோதா பெரியப்பாவின் உறவுதானே, உறவுகளை ஏன் சந்திக்கு இழுக்கின்றீர்கள். உங்கள் இருவருக்கும் இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்க இன்னம் காலமிருக்கின்றது. அந்த நடவடிக்கை தொடரும்வரை சற்று பொறுமையாக இருங்கள். நீங்கள் இருவரும் உங்கள் கையாட்களும் சேர்ந்து இந்த நாட்டின் இரண்டரைக் கோடி மக்களுக்கும் செய்த அநியாயத்தை பொதுமக்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே நினைவில் வைத்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். நீங்கள் நியமித்த ரணில் ராஜபக்ஸ உங்களுக்கு எதிராக எதுவும் செய்யப்போவதில்லை. எனவே சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் உறவுகளையும் எள்ளும்கஹ கொண்டு செல்ல இந்த நாட்டு சட்டத்தரணிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.