Header Ads



தேர்தலை ஒத்திப்போட எந்த, துரும்பைப் பயன்படுத்தலாம்..?


உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு எவ்வாறான துரும்பைப் பயன்படுத்துவது என்று அரசாங்கம் யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிலர் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவற்றில் ஒன்றாக அவசரகாலச் சட்டத்தை அறிவித்து தேர்தலை ஒத்திப்போடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


எனினும், அரசாங்கத்திலுள்ள சிலர் அதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்குவதற்கு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி தேர்தலை ஒத்திப்போட்டால் மீண்டும் சர்வேதச எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும், அமரிக்கா - ஐரோப்பிய ஒன்றியத்தைப் பகைக்க வேண்டி வரும் ஜி.எஸ்.பி. பிளஸை இழக்க நேரிடும் என்று அரசாங்கத்திலுள்ள சிலரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இறுதியில் தற்போதைய பொருளாதார நிலையில் அதைச் செய்வது சரியில்லை என்று கூறி அந்த யோசனையை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது. Tw

No comments

Powered by Blogger.