Header Ads



தேசப்பிரியவின் அதிரடி, ரணிலின் நரித் தந்திரத்திற்கு ஆப்பு...? (முழு விபரம் இணைப்பு)


தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து நேற்று (25) இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்கு மூன்று உறுப்பினர்கள் போதுமானவர்கள் என்றும், ஒருவரின் பதவி விலகலால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்டாது என அரசியலமைப்பின் உறுப்புரைகளை மேற்கோள்காட்டி மஹிந்த தேசப்பிரிய பேஸ்புக் பதிவொன்றில் கூறியுள்ளார்.


அரசியலமைப்பின் சரத்துக்கமைய, மேற்கோள்காட்டி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது என்றார்.


“தலைவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கலாம்” அவர்களின் பெரும்பான்மை வாக்குகளுக்கமைய தீர்மானம் நிறைவேறும் என்று அவர் கூறினார்.


அத்துடன், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த போதிலும், ஆணைக்குழுவிற்குச் செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசியலமைப்பின் சரத்தை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.


அதேவேளை உள்ளுராட்சித் தேர்தலை எப்படியேனும் ஒத்திவைக்க ஜனாதிபதி ரணில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும்,  அதற்காக அவர் 7 முயற்சிகளை மேற்கொண்டும் அவற்றில் அனைத்திலும் தோல்வியடைந்துள்ளதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.