Header Ads



ஹரீனின் அறிவிப்புக்கு, கெஹலிய எதிர்ப்பு - தீர்மானமும் கைவிடப்பட்டது


இலங்கை வரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று தொடர்பான எந்தவோர் அறிக்கையும் சுகாதார அமைச்சிடம் அல்லது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார்.


கடந்த 12 மணி நேரத்தில் பல செய்திகள் வெளியாகியிருந்தாலும்இலங்கையின் கொரோனா நெறிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தனது டுவிட்டர் பதிவில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளில் இருந்து அறிக்கை வெளியாகும் என்றும் இந்த நெறிமுறையை கடைபிடிக்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


நேற்றையதினம் வெளியிடப்பட்ட கொரோனா ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.


இலங்கைக்குள் உள்நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்காக வெளியிடப்பட்ட  ஒழுங்குவிதிகள் செல்லுபடியாகாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


கெரோனா ஒழுங்குவிதிகளை வெளியிடும் அதிகாரம் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மாத்திரமே உள்ளது என்று சுகாதார அமைச்சு இன்று (14) தெரிவித்துள்ளது.


17ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலுக்கு பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.