Header Ads



சமூகத்தின் ஈவி­ரக்­க­மற்­ற செயற்­பாட்டினால் நெஞ்சு அடைக்­கி­றது - நிறுத்துங்கள் இந்த அநாகரீகத்தை


(விடிவெள்ளி பத்திரிகையில் 26.01.2023 வெளியாகியுள்ள ஆசிரியர் தணையங்கம்)


தவிர்க்­கப்­பட வேண்­டிய விபத்­துக்க­ளும், நாக­ரி­க­மற்ற செயல்­களும்


நாட்டில் கடந்த சில தினங்­களில் இடம் பெற்ற வாகன விபத்­துகள் பல உயிர்­களைப் பலி­யெ­டுத்­துள்­ளன. இக்­கோர­ வி­பத்­துக்கள் மக்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளன.


கடந்த 20 ஆம்­தி­கதி முதல் நேற்று முன்­தினம் 24 ஆம் திகதி வரை இடம்­பெற்ற நான்கு வாகன விபத்­து­களில் மொத்தம் 11 உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. இவர்­களில் 9 பேர் முஸ்­லிம்­க­ளா­வர்.


காவு கொள்­ளப்­பட்ட 11 உயிர்­களில் நான்கு மாத­மே­யான ஆண்­கு­ழந்­தையும் உள்­ள­டங்­கி­யுள்­ளது. இவர்­களில் மூவர் பாட­சாலை மாண­விகள். ஒருவர் பாட­சாலை மாணவர். அடுத்­தவர் பேரா­த­னைப்­பல்­க­லைக்­க­ழக கணி­தத்­துறை சிரேஷ்ட விரி­யு­ரை­யா­ள­ராவார்.


வாகன விபத்­துக்கள் நாட்டில் அதி­க­ரித்து வரு­கின்­ற­மைக்கு சார­தி­களின் கவ­ன­யீ­னமே முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. பொதுப்­போக்­கு­வ­ரத்து சேவை பஸ் சார­திகள் வீதி­போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறி பஸ்­வண்­டி­களைச் செலுத்­து­வதே வாகன விபத்­துக்­க­ளுக்கு காரணம் என பொது­மக்­களால் தொடர்ச்­சி­யாக முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.


கடந்த 20ஆம் திகதி நுவ­ரெ­லிய நானு ஓயா ரதல்ல பகு­தியில் இடம்­பெற்ற பஸ், வேன், முச்­சக்­கர வண்டி விபத்தில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த ஐவர் உள்­ள­டங்­கலா 7 பேர் பலி­யா­கி­யுள்­ளமை அப்­பி­ர­தே­சத்தை மீளாத சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.


கொழும்பு தேர்ஸ்டன் கல்­லூரி மாண­வர்கள் சுற்­று­லா­சென்ற பஸ்­வண்­டி கட்­டுப்­பாட்­டினை இழந்த நிலையில் வேன் மற்றும் முச்­சக்­க­ர­வண்டியொன்­றுடன் மோதி இக்­கோர ­வி­பத்து நிகழ்ந்­துள்­ளது.


கன­ரக வாக­னங்கள் பய­ணிப்­ப­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்த வீதியில் பஸ் பய­ணித்­த­மையே விபத்­துக்குக் காரணம் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். குறித்த பஸ்­வண்­டியில் 41 மாண­வர்கள் உட்­பட 53 பேர் இருந்­துள்­ளனர். மாண­வர்கள் காயங்­க­ளுக்­குள்­ளாகி உயிர்­தப்­பி­யுள்­ளனர்.


இவ்­வி­பத்தில் 7 உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் விபத்தில் பலி­யா­ன­வர்கள் தொடர்­பான மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்கு வைத்­தி­யச­ாலையில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டாது பஸ்ஸில் பய­ணித்த மாண­வர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­பட்­ட­தாக அப்­பி­ர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர். இதனால் விபத்தில் பலி­யான 5 முஸ்­லிம்­களின் ஜனாஸா இறு­திக்­கி­ரி­யை­க­ளுக்கும் தாமதம் ஏற்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது.


இதே­வேளை கடந்த 21 ஆம் திகதி குரு­நாகல் பொல்­பி­டி­க­மயில் இடம் பெற்ற பஸ் வண்டி– ஸ்கூட்டர் விபத்தில் பேரா­தனை பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட கணித விரி­வு­ரை­யாளர் ஜுமான் பலி­யா­கி­யுள்ளார். இவ­ரது இழப்பு கணி­தத்­து­றைக்கு பாரிய இழப்பு என பேரா­தனை பல்­க­லைக்­க­ழக பீடா­தி­ப­தி­யினால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­பத்­துக்குக் காரணம் பஸ்­வண்டி ஒன்­றே­யாகும்.


நேற்று முன்­தினம் 24 ஆம் திகதி புணானை பிர­தான வீதியில் இடம்­பெற்ற பஸ்­வண்டி வேன் விபத்தில் காத்­தான்­குடி வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் பெண் வைத்­தி­யரின் 4 மாதங்­க­ளே­யான குழந்­தையும், அவ­ரது 74 வய­தான மாமாவும் பலி­யா­கி­யுள்­ளனர். வேனில் பய­ணித்த மேலும் ஐவர் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.


மேலும் அதே தினம் அநு­ரா­த­புரம் கம்­பி­ரி­கஸ்­வெ­வயைச் சேர்ந்த 6 வய­தான மாணவி பாட­சா­லை­யி­லி­ருந்து பஸ்ஸில் வீடு­ தி­ரும்­பிக்­கொண்­டி­ருந்த நிலையில் பஸ்­ஸி­லி­ருந்து இறங்­கும்­போது பஸ்ஸின் சில்­லுக்குள் சிக்கி பரி­தா­ப­மாக உயிர் துறந்­துள்ளார். இந்த விபத்­துக்குக் காரணம் பஸ் வண்­டியின் சாரதி மற்றும் நடத்­து­னரின் கவனயீனமேயாகும் என்பதை அனுமானிக்கலாம். பஸ் பயணிகளை இறக்கிவிடுவதில் சாரதிகளும் நடத்துனர்களும் காட்டும் அவசரமே இவ்வாறான விபத்துக்களுக்குக் காரணமாகும்.


குறிப்­பிட்ட நான்கு வாகன விபத்­துக்­களும் பஸ் வண்­டி­க­ளுடன் தொடர்­புப்­பட்­டவை என்­பதை நாம் இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம். இவ்வாறான நிலையில் பொதுப்போக்குவரத்துச் சேவைக்குப் பொறுப்பான அமைச்சர் இது விடயத்தில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி­­யு­றுத்த விரு­ம்­பு­கிறோம்.


அதே­போன்று இங்கு கவ­­லைக்­கு­ரிய மற்­றொரு விடயம் என்­ன­வென்­­றால், விபத்தில் சிக்­கி­ய­வர்­க­ளுக்கு முத­லு­தவியளிப்­ப­தையும் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­வ­தை­யும் விடுத்து விபத்தை வீடியோ பதிவு செய்­வதிலேயே மக்கள் ஆர்வம் காட்­டு­வதாகும். அத்­துடன் இரத்த வெள்­ளத்தில் காட்­சி­ய­ளிக்கும் சட­லங்­க­ளையும் காய­ம­டைந்­த­வர்­க­ளையும் அவர்­க­ளது அல­றல்­க­ளையும் கூட இவர்கள் ஒளிப்­ப­திவு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­டு­கி­றார்கள். இவை சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் குடு­ம்­பத்­தி­னரை கடு­மை­யாகப் பாதிக்­கின்­றன. சம­கா­ல சமூகம் இந்­த­ள­வுக்கு ஈவி­ரக்­க­மற்­று செயற்­ப­டு­வதை நினைக்­கும்­போது கவலை நெஞ்சை அடைக்­கி­றது. இந்த அநா­க­ரி­க­மான செயற்­பாட்டை கண்­டிப்­பாக தவிர்த்துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.


மேற்­படி விபத்துச் சம்­ப­வங்­களில் உயி­ரி­ழந்­த­ குடும்­பங்­க­ளுக்கு எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­விப்­ப­துடன் மேலான சுவனம் கிடைக்­கவும் பிரார்த்­திப்­போமாக.– Vidivelli

No comments

Powered by Blogger.