Header Ads



யூரியா உரத்தை விற்றே அரச ஊழியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கினோம்


யூரியா உரம் விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே அரச ஊழியர்களுக்கான  டிசெம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் அமைச்சில் இடம்பெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.


கடந்த சிறுபோகம் மற்றும் இந்த முறை பெரும் போகத்திலும் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்த விவசாய அபிவிருத்தி திணைக்களம் 1000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.


கருவூலத்துக்கு அனுப்பப்பட்ட அந்த நிதியின் ஒரு பகுதியை அரச ஊழியர்களின் டிசெம்பர் மாத சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் பயன்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.