Header Ads



திருமணத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், உலருணவுப் பொதிகளை விநியோகித்த தம்பதி


திருமண வைபவத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகித்த தம்பதியினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இதற்காக சுமார் 20 லட்சம் ரூபாவினை தம்பதியினர் செலவிட்டுள்ளனர்.


இலங்கையை சேர்ந்த ஜெர்மனியில் வசிக்கும் ஸ்டீபன் எனும் இளைஞர் ஜூலியா என்ற ஜெர்மன் பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துள்ளார்.


இருப்பினும், இளைஞரின் உறவினர்களுக்காக இலங்கையில் திருமணத்தினை செய்துக்கொள்ள திட்டமிட்ட நிலையில், நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்டெபான் மற்றும் ஜூலியா தம்பதியினர் தமது திருமண வைபவத்திற்காக ஒதுக்கிய பணத்தை மினுவாங்கொடை, மாதம்மன பிரதேசத்தில் நெருக்கடியில் உள்ள மக்களுக்காக செலவிட்டுள்ளனர்.


இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீபன்,


10 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரருக்கு திருமணம் நடந்தபோது, ​​இதேப்போன்று பணத்தை பொருளாதார சிரமத்தில் உள்ளவர்களுக்காக செலவு செய்ததாகவும் கூறியுள்ளார்.


ஸ்டீபனின் தந்தை ஒரு ஜெர்மன் நாட்டவர் மற்றும் அவர் இரண்டாம் உலகப் போரின் போது நாட்டில் நிறுத்தப்பட்ட இராணுவக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.


இவர் இலங்கைப் பெண்ணை மணந்துள்ளதுடன், ஸ்டெபனின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது ஜேர்மன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை உறுப்புகளை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், இறுதிப் போரின் போது இலங்கையின் ஆயுதப்படைகளுக்கு ஏராளமான செயற்கை உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.