Header Ads



பணம் தருவீர்களா..? இல்லையா..??


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த தொகை நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பதை தெரியப்படுத்துமாறு உரிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.