Header Ads



பௌத்தர்களை ஏமாற்றி பணம் பெற்று, நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகை இடித்தழிப்பு


குருநாகல் பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் பத்திருப்பு ( எண் கோண மண்டபம் ) தற்போது இடித்து அழிக்கப்பட்டு வருவதாக Hiru செய்தியாளர் தெரிவித்தார் . 


முன்னதாக குருநாகல் , பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகை கட்டப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது இந்த கடிதத்தில் பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஆகியோர் கையொப்பமிட்டனர் . உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி , பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான ' தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . 


அத்துடன் , தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் சேபால் அமரசிங்க என்ற மற்றொருவரால் வெளியிடப்பட்ட கருத்து பௌத்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 


இதனையடுத்து , இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விகரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார் . இதனையடுத்து , ஜனக சேனாதிபதி மற்றும் சேபால அமரசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறைமா அதிபர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்தார் . 


 அதன்படி , விசாரணைகளை முன்னெடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சேபால் அமரசிங்கவை கைதுசெய்து நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து , எதிர்வரும் 10 ஆமதிகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் . 


இவ்வாறானதொரு பின்னணியில் , இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று குறித்த பகுதி சென்றிருந்தார் . 


அதன்போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட கட்டடத்தின் வடிவத்தை மாற்றியமைக்க அதன் ஸ்தாபகரான ஜனக சேனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது 


 அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்றும் நேற்று ( 7 ) குறித்த பகுதிக்கு சென்றதுடன் , தொல்பொருட்கள் சட்டத்தின் பிரகாரம் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது .

No comments

Powered by Blogger.