Header Ads



ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொல­ரினை, பெற்றுக்கொடுக்குமா ஜம்­இய்­யத்துல் உலமா..?


(ஏ.ஆர்.பரீல்)


அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை 100 வருட சேவையைக் கொண்­டாடும் வேளையில் இன்னும் சில தினங்­களில் எமது நாடு சுதந்­தி­ரத்தின் 75 ஆவது வருட நிறைவைக் கொண்­டா­ட­வுள்­ளது.


இச்­சந்­தர்ப்­பத்தில் உல­மா­சபை ஒவ்­வொரு வரு­டமும் திறை­சே­ரிக்கு ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொல­ரினை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அல்­லாஹ்­விடம் பிரார்த்­திக்­கிறேன். சுதந்­தி­ரத்தின் 100 வருட நிறைவில் 25 பில்­லியன் டொலர்­களை நாம் திறை­சே­ரிக்கு வழங்க துஆ செய்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.


அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை 100 வருட நிறைவு விழா கடந்த 19 ஆம் திகதி கொழும்பு பண்­டா­ர­நா­யக்கா ஞாப­கார்த்த சர்­வ­தேச மண்­ட­பத்தில் இடம் பெற்­றது. நிகழ்­வுக்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யிலே ரிஸ்வி முப்தி இவ்­வாறு கூறினார்.


அவர் தொடர்ந்தும் அங்கு உரை­யாற்­று­கையில், கடந்த காலங்­களில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை ஹலால் சான்­றிதழ் வழங்­கிய சந்­தர்ப்­பங்­களில் நாட்­டுக்கு மில்­லியன் கணக்கில் அந்­நிய செலா­வ­ணியைப் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.


பாரா­ளு­மன்றம் 2002 இல் கோரிக்கை விடுத்­த­தற்­கி­ணங்­கவே ஹலால் சான்­றிதழ் வழங்கும் நட­வ­டிக்­கை­களை உலமா சபை முன்­னெ­டுத்­தது. அன்றி உல­மா­சபை தன்­னிச்­சை­யாக ஹலால் சான்­றிதழ் வழங்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை.

ஹலால் சான்­றிதழ் மூலம் நாட்­டுக்கு அந்­நிய செலா­வணி கிட்­டி­யதே ஒழிய பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்றார்.


அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை வரு­டாந்தம் ஒரு பில்­லியன் டொலர் திறை­சே­ரிக்கு பெற்­றுக்­கொ­டுக்கும் முன்மொழிவு தொடர்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்­தி­யிடம் வின­வி­ய­போது ‘எங்கள் பிரார்த்­த­னைக்கு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வலுச்­சேர்த்­துள்ளார்.எமது சுதந்­தி­ரத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவில் உலமா சபையின் 25 பில்­லியன் டொலர்­க­ளுடன் மேலும் 75 பில்­லியன் டொலர்கள் எங்­க­ளுக்­கு­கிட்­ட­வேண்டும் என தானும் பிரார்த்­தனை செய்­வ­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார் என்று கூறினார்.- Vidivelli

No comments

Powered by Blogger.