Header Ads



மைத்திரி - பொன்சேக்கா பாராளுமன்றத்தில் கடும் மோதல்


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் இன்று -18- பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


முன்னாள் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும். உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் இது போன்றவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்தார் .


அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெடிகுண்டுத் தாக்குதலில் இருந்து இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத ஒருவருக்கு தம்மைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க உரிமை இல்லை என்று கூறினார்.


நட்டஈடு வழங்குவதற்கு உதவியாக பணம் சேகரிக்கப்படுமாயின், அவ்வாறான வசூலை ஏற்றுக் கொள்வதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் .


பொன்சேகா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டதற்கு தாம் தான் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு சிறிசேன மேலும் நினைவூட்டினார்.

No comments

Powered by Blogger.