Header Ads



புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமானது


நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்கிற கருத்து நாட்டில் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். 


உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்போது மின் வெட்டு அமல்ப்படுத்தக்கூடாது எனவும், பொதுஜன பெரமுனவில் இருந்து எவரும் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றே எதிர்பார்த்தனர். எனினும், அதிகளவான எண்ணிக்கையானோர் இம்முறை எமது கட்சி சார்பாக போட்டியிடுகிறார்கள் என்றார். 


பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (23)​ நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.