Header Ads



இம்ரான் எங்கே..? தமிழ்நாட்டு உளவுத்துறையின் எச்சரிக்கை


பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் 'கஞ்சிபானி' இம்ரான் என்கிற முகமது நஜீம் முகமது இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டிசம்பர் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் கஞ்சிபான் இம்ரானும் அவரது சகாவும் இறங்கியதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாநிலம் முழுவதும் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகளை உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.


கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த இம்ரான், கடந்த 2019ம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சொந்த பிணையில் கடந்த 20ம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.


பிணையில் வெளிவந்துள்ள இம்ரான் இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தமிழக உளவுத்துறைக்கு குறிப்பிட்ட தகவல் கிடைத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.


கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது குறித்து இலங்கை தரப்பில் இருந்து இன்னும் குறிப்பிட்ட பதிலை வழங்கவில்லை என்றும், கஞ்சிபான் இம்ரான் தங்கள் நாட்டுக்குள் நுழைந்தது குறித்த உண்மைகளை நம்பகமான ஆதாரங்கள் மூலம் இந்திய புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளதாகவும் 'தி இந்து' சுட்டிக்காட்டுகிறது.

No comments

Powered by Blogger.