Header Ads



அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள கோட்டாபய


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.


இதற்கு முன்னர் இரத்துச் செய்யப்பட்டிருந்த குடியுரிமையை மீளப் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி விண்ணப்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 


2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது அமெரிக்க குடியுரிமையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நீக்கிக் கொண்டார். 


பதவி நீக்கத்தின் பின்னர் அவர் எந்த நாட்டிலும் புகலிடம் கோராத காரணத்தினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


கோட்டாபய ராஜபக்ஸ கடந்த ஜூலை மாதம் நாட்டிலிருந்து வௌியேறி பின்னர் 02 மாதங்களில் மீண்டும் நாட்டிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இலங்கைவாழ் முஸ்லிம்களையும் உலகவாழ் முஸ்லிம்களின் மனதையும் புண்படுத்திய அவர்களின் இறையடி சேர்ந்த அவர்களின் புனிதமான உறவுகளின் மையத்துகளை, இலங்கையில் அடக்கக்கூடாது வௌியில்தான் தள்ள வேண்டும் என மாலைத்தீவு அரசாங்கத்தின் அனுமதி பெற்று அங்கே அந்த மையத்துக்களை கொண்டு செல்ல அனுமதி பெற்றவுடன் அந்த நாட்டு மக்கள் இவனுடைய மிகவும் மோசமான குப்ர் மனநிலையைப் புரிந்தவுடன் அவர்களின் அனுமதியை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு பிறந்த நாற்பது நாட்களே ஆன பச்சிளம் பாலகர்,இரண்டு வருட குழந்தைகளை தீயிட்டுப் பற்றவைக்க பலாத்காரம் செய்த இந்த சைத்தானை அல்லாஹ்தஆலா கேவலப்படுத்த ஆரம்பித்திருக்கின்றான். இந்த உலகில் படவேண்டிய அத்தனை கேவலங்களையும் அவமானங்களையும் அடைய வேண்டும். மறுமையில் அந்த ரஹ்மான் வாக்களித்த அத்தனை தண்டனைகளையும் அல்லாஹ் வழங்க வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம். அவனுக்கும் அவனுடைய கையாட்களுக்கும் இந்த அநியாயத்தையும் முஸ்லிம்களின் மனத்தையும் புண்படுத்திய அத்தனை சைத்தான்களுக்கும் சரியான தண்டனையை உலகிலும் மறுமையிலும் யாஅல்லாஹ் வழங்குவானாக என நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கொண்டே இருப்போம். அது எமது கடமை.

    ReplyDelete

Powered by Blogger.