Header Ads



எதிர்வரும் தேர்தலில் 90 சதவீத வெற்றியை நாங்கள் பெறுவோம்


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொண்ணூறு வீத வெற்றியை சுதந்திர மக்கள் கூட்டணி பெற முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இந்தப் புதிய கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும் தாம் தெளிவாகக் கூறுவதாகவும் அவர் கூறினார்.


டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ‘சுதந்திர மக்கள் கூட்டணி’யை நிறுவும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பில் சில காலமாகவே பிரச்சினைகள் இருப்பதாகவும், நாட்டை உருவாக்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.


நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் எழுந்து நிற்கும் வகையில் ஜனநாயகம் தேவை என்றும், அந்த நோக்கத்தின் அடிப்படையில் சுதந்திர மக்கள் கூட்டணி ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. 90சதவீத வெற்றி பெற்றால் எஞ்சிய 10ம் எங்கே. மரியாதையாக உயர் நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையுடன் உமது தந்திரத்தால் பாதிக்கப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு உடனடியாக 10 கோடி ரூபா நட்டஈட்டை கொடுத்துவிட்டு வேலையைப் பார்த்தால் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். கஞ்சி குடித்துவிட்டு பன்னீரைக் கொப்பளிக்க எத்தனிக்கும் உம்மைப் போன்ற அரசியல்வாதிகள் இந்த நாட்டுக்கு அழிவைத்தான் கொண்டுவரும்.

    ReplyDelete

Powered by Blogger.