Header Ads9 வீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு 3 வீத காணிகளே உள்ளன - இது அடிப்படை உரிமை மீறல்


இனப்பிரச்சினை தீர்வு முயற்சியின் ஒரு அங்கமாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும்  அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் 2023.01.26ம் திகதி நடைபெற்றது. 


அம் மாநாட்டில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை கூறியபோதும் தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஏ.எல்.எம் அதாஉல்லாவின் கருத்துக்கள் 


அதன் சுருக்கம் வருமாறு ...


காலத்திற்கு காலம் தேர்வாகும் ஜனாதிபதிகள் இவ்வகையான மாநாடுகளை கூட்டுவதும், பின்னர் அதன் கருத்துரைகளை கிடப்பில் போடுவதும் மரபாகி போயுள்ள நேரத்தில், கடந்த கால ஜனாதிபதிகளான மஹிந்தராஜபாக்ச,மைத்திரி பால சிறிசேனா போன்றோர் இருக்கின்ற இவ்வேளை சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க மாத்திரமே இத்தருணத்தில் இல்லை அவரினையும் இணைத்து, எல்லோரும் அமர்ந்து பேசி இறுதித் தீர்வினை இப்போதே அடைந்து விடவேண்டும்.எதிர்கால சந்ததியினருக்கு அதனை விட்டுவிடக்கூடாது.


தற்போது காணிவிடுவிப்பும் அதிகார பரவலாக்கல் மட்டுமே பேசப்படுகின்றது.அதிகார பரவலாக்கல் என்று நாம் எல்லைகளை வரையறை செய்து கொள்கிறோம். இதனால் மக்கள் திருப்த்தி கொண்டார்களா? அல்லது சமூகங்கள் ஒற்றுமைப்பட்டதா? இல்லவே இல்லை உதாரணமாக, அக்கரைப்பற்று டீ‌.ஆர்.ஓ பிரிவிலிருந்து திருக்கோவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவு பிரிந்து உருவான போது 17வீதமான மக்களுக்கு 40வீதமான காணிகள் போய்ச் சேர்ந்தது. இது தவறான நடைமுறையாகும். மற்றுமன்றி அக்காணிகளை தமிழ் சமூகம் மாத்திரம் உரிமை கொண்டாடுவது கொடுமையிலும் கொடுமையான செயலாகும். பயங்கரவாத காலத்திற்கு முந்திய காலத்தில் இருந்த காணி உரிமைகளை மக்களுக்கு வழங்குவதுடன் இன விகிதாசாரத்திற்கேற்ப காணிகள் சமூகங்களுக்கு பங்கீட்டு வழங்க வேண்டும். இலங்கையில் 9 வீதமாக வாழும் முஸ்லிம் மக்கள் சுமார் 3வீதமான காணிகளைக் கொண்டே காணப்படுகின்றனர். இது வாழ்வியலுக்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு அச்சமூகம் காணப்படுவதனை சுட்டி நிற்கின்றது. என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கூறினார்.  


அவ்வேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தனது கருத்தினை கூறும் போது" காணி ஆணைக்குழுவினை நியமிக்க இருக்கின்றேன். மேலும் வனவள வன ஜீவராசிகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் பேசித்தீர்வு காணுங்கள் ."என்றார். 


அவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா   கொரோனா ஜனாசாக்கள் எரிக்கப்படுகின்ற வேளை அதனை நிறுத்துமாறு பலதடவைகள் சுகாதார அமைச்சராக இருந்த அவரிடம் வேண்டினோம். ஆனால் ,அவர் அதனை தடுக்கத் தவறிவிட்டார். அதனால் அவர் மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கையிழந்து காணப்படுகிறது. இதனால் காணிப் பிரச்சினையை கையாள்வதற்கு அவர் பொருத்தமானவரல்ல என்று பவித்திராவினை மறுதலித்தார்.


13 வது அரசியல் அமைப்பு சீர் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்டம் இலங்கை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தர போதுமானதா? அதன் வல்லமை என்ன என்பதனை வரலாற்றில் நாம் அறிந்துள்ளோம். இருப்பினும் மாகாண சபை முறையினை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் எமது முழுமையான ஆதரவினை தருகின்றோம். அதனை நடைமுறைப்படுத்துங்கள்.


இப்போது தேசிய ரீதியான வனம் பற்றி பேசுகின்றோம். அம்பாரை மாவட்டத்தில் பயிர்ச் செய்கை பண்ணப்பட்ட அதிகப்படியான காணிகளை வனத்தினணக்களம் கையகப்படுத்தியுள்ளது. அதற்கு வனத்திணைக்களம் சொல்லும் நியாயம் 30வீதமான வனம் நாட்டின் நிலைபேறினை பேன வேண்டுமென்கிறார்கள் .சரி அதனை தேசிய நலன் கருதி ஏற்றுக்கொள்கிறேன். 


ஆனால் சபயோரை பார்த்து கேள்வி ஒன்று கேட்கிறேன் "நாட்டிற்குத் தேவையான 30வீத வனத்திற்குரிய காணியினை வடக்கு கிழக்கில் தான் பெற வேண்டுமா? ஆகவே ஏனைய மாவட்டங்களிலும் வனத்தின் அளவினை அதிகரிக்க சந்தர்ப்பத்தினை வழங்கி பயிர்ச்செய்கை காணிகளை வடக்கு கிழக்கில் விடுவிக்குமாறு கேட்டுக் கொ ண்டதோடு இன்னும் பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த  விடயங்களை சபையின் கவனத்திற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா முன்வைத்தார்.

No comments

Powered by Blogger.