Header Ads



72 மில்லியன் ரூபா பெறுமதியான தோடம்பழங்கள்


இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத தோடம்பழங்கள் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.


மூன்று கொள்கலன்களில் உள்ள 72000 கிலோ தோடம்பழங்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளது.


குறித்த விடயத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


72 மில்லியன் ரூபா பெறுமதியான 72000 கிலோ தோடம்பழங்கள் சுமார் 60 மாகாண வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.


இதனை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்துள்ளார்.

1 comment:

  1. பழங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுத்துவிட்டு அவற்றை அதன் உரிமையாளர்களுக்கு விடுவிக்காமல் அவற்றைப் பாவிக்கும் அதிகாரம் இந்த நிமல் சிரிபால சில்வா என்ற மநதி(ரி) யார் கொடுத்தார்கள். அரசாங்கத்தின் அதிகாரிகள் என்ற பெயரால் தான்தோன்றித்தனமாக தனிநபர்களின் சொத்துக்களை அபகரிக்க முடியாது. அதன் உரிமையாளர்கள் உயர் நீதிமன்றம் சென்றால் அவற்றை சட்டவிரோதமாக அனுபவிக்க அனுமதித்தவர்களின் சொந்தப் பணத்தின் மூலம் நட்டஈட்டைச் செலுத்துமாறு நீதிமன்றங்கள் கட்டளையிட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். நீதியும் நியாயமுமின்றி பொதும்க்களின் சொத்துக்களை அனுபவித்துப் பழகிய இந்த மந்தி(ரி)களுக்கு இந்த நாட்டின் சட்டம் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.