மைத்திரிக்கு 6 வீடுகள் உள்ளனவா..?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பொலன்னறுவையில் மாத்திரம் மூன்று வீடுகள் உள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று வீடுகள் உள்ளதாகவும் கொழும்பில் இரண்டு வீடுகளும் கம்பஹாவில் ஒரு வீடும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடுகள் தனது சொந்த பெயரில் இல்லாவிட்டாலும், தனது நண்பர்கள், உறவினர்கள் பெயரில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Tw
Post a Comment