Header Ads



தேர்தலை ஒத்திவைக்கக் கூடிய 3 சந்தர்ப்பங்கள்


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார்.


அதற்கமைய, நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவினை ஏற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் முடிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. புகையிரதம் போய்விட்டது.போனது உறுதியான பிறகு மக்களுக்கு உபதேசம் பண்ணுகின்றார். எஞ்சுவது இந்த செயற்படுத்தப்படாத உபதேசங்கள் மட்டும்தான். அரச உயர் அதிகாரிகளுக்கு சட்டத்தைச் சரியாக விபரிக்கும் திறனும் ஆற்றலும் வௌிப்படுவது பென்ஷன் போன பிறகுதான். அது குறிப்பாக இந்த நாட்டு நிர்வாகம்,அரசியலின் ஒரு சிறப்பம்சமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.