Header Ads



தீ விபத்தில் தாய், 2 குழந்தைகள் பலி


அநுராதபுரம் - எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.