Header Ads



ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் - மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர்


தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன், அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நேற்று (02) இரவு தொலைக்காட்சி தெரணவில் ஒளிபரப்பான 360 நேர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.


கேள்வி – ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் மின்கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு நீங்கள் செலுத்தவில்லை. அது ஏன் ?


“நான் இருந்த வீட்டின் மின் கட்டண பட்டியல் வேறு ஒருவரின் பெயரில் இருந்தது. எனது பெயருக்கு பட்டியலை மாற்றித் தருமாறு 3 கடிதங்களை அனுப்புயுள்ளேன். . பில் என் பெயரில்தான் இருந்தால்தான் என்னால் பணம் செலுத்த முடியும். பட்டியல் என் பெயருக்கு மாற்றப்பட்ட மறுநாள் அபராதம் தவிர எல்லாவற்றையும் செலுத்தினேன்.


கேள்வி – இவ்வளவு பெரிய தொகை நிலுவையாக இருந்தும் உங்கள் வீட்டில் மின் இணைப்பை ஏன் வெட்டவில்லை?


“அது அவர்களின் தவறு இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”


கேள்வி – ஏழை, அப்பாவி மக்களின் இணைப்புகளை மட்டும் மின் சார சபை துண்டிக்கிறதா?


“அது உங்களின் கருத்து ”


கேள்வி – இது உண்மையில் ஒரு நியாயமான கேள்வி. ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் மின்கட்டணம் செலுத்துமளவுக்கு நீங்கள் என்ன உபகரணங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?


“என்ன பிரச்சினை என்று தெரியலை.. இது குறித்தும் மின்சார சபைக்கு அறிவித்து விட்டேன் ..இரண்டு மூன்று தடவை வந்து செக் பண்ணிச் சென்றார்கள் . ஆனால் நான். மின்சாரம் பயன்படுத்தினேன், அதற்கு நான் பணம் செலுத்தினேன்.”

No comments

Powered by Blogger.