Header Ads



2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய, சிறந்த நாடுகளில் இலங்கை முதலிடம் பிடித்தது


2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. 


சுற்றுலா இணையத்தளமான Travel Triangle இணையத்தளத்தினால் அண்மையில் வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், நாட்டின் இயற்கை வளங்களின் அழகு காரணமாக பயணத்திற்கு ஏற்ற முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது.


கடற்கரைகள், வனவிலங்குகளால் நிறைந்த வன கட்டமைப்புகள், ரம்மியம் நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைத்தொடர்கள் என பல சுற்றுலா இடங்கள் தொடர்பான தகவல்களை வௌியிடும் இணையத்தளமாக Travel Triangle இணையத்தளம் காணப்படுகின்றது.


இலங்கையின் செழிப்பு மற்றும் பௌதீக பன்முகத்தன்மையைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைவதாக Travel Triangle இணையத்தளம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் நான்காவது உயரமான மலையான ஶ்ரீ பாத மலையுச்சியில் இருந்து பார்க்கும் காட்சி சுவாரஷ்யமாக இருப்பதாகவும், ஒவ்வொருவரின் உடற்தகுதியைப் பொறுத்து, 5 முதல் 6 மணித்தியாலங்களுக்குள் இந்த உலக பாரம்பரிய தளத்தில் ஏறலாம் எனவும் Travel Triangle இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


வாழ்வில் புத்துயிர் பெற வேண்டுமானால், இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் நிழலான இடத்தில் அமர்ந்து விட்டமின் D யை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இலங்கை தொடர்பில் Travel Triangle இணையத்தளம் தகவல்களை பதிவு செய்துள்ளது.

1 comment:

  1. இலங்கைக்கு உல்லாசப் பிரயாணிகள் வருவதற்கு இது நல்ல வாய்ப்பு தான். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நாட்டின் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பெரும் கள்வர்களாகவும், நாட்டுக்கு நன்மை பயப்பது பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாத கழுதைகளாக செயற்படும் போது அந்த உல்லாசப்பிரயாணிகளின் வருகை இந்த நாட்டுக்கு எவ்வளவு தூரம் நன்மைதரும் எனக் கேட்டால் அது வெறும் புஷ்வானம்தான். இந்த நாட்டு அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மோசமானவர்கள். அதைவிட இந்த நாட்டு மக்களும் மிகவும் மோசமானனவர்கள் என்பது தான் எமக்கு அனுபவம் மூலமாகத் தெரிகிறது. இந்த பூமிக்கு கடவுள்தான் அருள்பாலிக்க வேண்டும் எனெனில் இந்த நாட்டில் அப்பாவி குழந்தைகள், அப்பாவி பெண்கள் வயது முதிர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. மற்றவர்களின் தயவில் வாழும் அவர்களை வாழவைப்பது இந்த நாட்டு மக்களின் தலையாய கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.