Header Ads



கடந்த அண்டு 200 மில்லியன் தேங்காய்களை நாசமாக்கிய விலங்குகள்


குரங்குகள் மற்றும் இராட்சத அணில்கள் கடந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 200 மில்லியன் தேங்காய்களை அழித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


2022 ஜனவரி முதல் ஜூன் வரை, வனவிலங்கு சேதத்தால் தென்னந்தோப்புகள் அதிக பயிர் சேதத்தை சந்தித்துள்ளன.


“அதன்படி, கடந்தாண்டின் முதல் பாதியில் குரங்குகள் மற்றும் இராட்சத அணில்களால் 93 மில்லியன் தேங்காய்கள் அழிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், நிலைமை 200 மில்லியன் தேங்காய்களாக மோசமடைந்தது” என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


விவசாயிகளுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டோக் குரங்குகளால் 200 விவசாய அபிவிருத்திப் பகுதிகளும், 180 விவசாய அபிவிருத்திப் பகுதிகள் இராட்சத அணில்களாலும், 50 பகுதிகள் ஏனைய குரங்குகளாலும் சேதமடைந்துள்ளன.


21 மாவட்டங்களில் மொத்தம் 57,815 ஹெக்டேர் தென்ன செய்கை அழிந்துள்ளது. அந்தப் பகுதிகளில் தென்னை பயிரிடப்பட்டுள்ள மொத்த நிலத்தின் அளவு 275,540 ஹெக்டேர் ஆகும். ஆனால், அறுவடையில் 21 சதவீதம் சேதமடைந்துள்ளது” என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“சேதமடைந்த தேங்காய்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு ஹெக்டேர் செய்கையில் 1600 முதல் 2000 தேங்காய்களை காட்டு விலங்குகள் அழிக்கின்றன” எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, நாட்டில் 440,640 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை செய்கை செய்யப்படுகிறது. 13.1 சதவீத தேங்காய்களை இந்த விலங்குகள் தின்று அழித்துவிட்டன.


குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் 2022 முதல் ஆறு மாதங்களில் தென்னைச் செய்கைக்கு அதிக சேதத்தை ஏற்படுத்திய மாவட்டங்களில் முன்னிலை வகிக்கின்றன.


குருநாகல் மாவட்டத்தில் பயிர் சேதம் 24,038 ஹெக்டேயர்களாகும்.


வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க, பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகங்கள் தலைமையிலான குழுவை விவசாய அமைச்சு நியமித்துள்ளது.


வன விலங்குகளால் பயிர் சேதங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன் விரிவான கலந்துரையாடலையும் விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.