Header Ads



2000 மடங்காக மின் கட்டணம் உயரவுள்ளதா..?


நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று -01- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.​


அங்கு உரையாற்றிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், நுகர்வோருக்கு 0 முதல் 30 அலகுகள் வரை மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.​


மேலும் கருத்து தெரிவித்த பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,​


​“நாளை அமைச்சரவைக்கு செல்லும் மின்சாரத் திருத்தத்தின் சில அளவீடுகளை நேற்று ஆய்வு செய்தேன். இதில், 0-30, 31-61, 61-90 மற்றும் 91-120 அலகுகளுக்கு இடையில் நுகர்வோரின் மின் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம் இல்லை என நினைக்கிறேன்.இதில் 0-30 அலகுகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டணத்தை 2003 மடங்காக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. இலங்கையில் சுமார் 50 லட்சம் பேர் 90க்கும் குறைவான அலகுகளை பயன்படுத்துபவர்கள் உள்ளனர். இவ்வாறு அவர்களின் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், இந்த சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். 0-30க்கு இடையில் நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 31-60க்கு இடைப்பட்ட 120 அலகுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரிடமிருந்தும் அடுத்த ஆண்டு சுமார் 80 பில்லியன் கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்காக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற பிரேரணையாக இருப்பதால், தற்போதைய நிலையில் இலங்கை மின்சார சபை கடந்த 4 மாதங்கள் மற்றும் இந்த மாதம் உட்பட செயல்பாட்டு இலாபத்தை ஈட்டுகிறது.

1 comment:

  1. இவர் உண்மை பேசுகின்றாரா? அல்லது இவர் பேச வேண்டிய 'உண்மைகளை' அரசாங்கம ஏற்கனவே தயார் செய்து வழங்குகின்றதா என்பது இதுவரை எமக்குப் புரியவில்லை. இவரையும் மீறி பாராளுமன்றம் மின்சார விலையை பலவந்தமாக அதிகரிக்கின்றதா என்ற விடயங்கள் பொதுமக்களுக்குப் புரியவில்லை. இந்த உண்மைகளை யாராவது தெரிவிப்பார்களா?

    ReplyDelete

Powered by Blogger.