Header Ads



இலங்கை வரலாற்றில், இதுவே முதல் முறை


அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கைக்கு அமைய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சனிக்கிழமை (31) ஓய்வு பெற உள்ளனர் என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒரு சில அரச நிறுவனங்களைத் தவிர 60 வயதுக்கு மேற்பட்ட அரச ஊழியர்கள், டிசெம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவேண்டும் என்று அமைச்சு அண்மையில் சுற்றிக்கை வெளியிட்டிருந்தது.


அதற்கமைய 60 முதல் 65 வயதான 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் ஓய்வு பெற்று வீடு செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.


கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகள், முப்படைகள் உட்பட இலங்கை நிர்வாக சேவையில் இருந்து பலர் ஓய்வு பெறுகின்றனர் என்றும் இலங்கை வரலாற்றில் ஒரே நேரத்தில் பாரிய அளவான அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை என்று தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.


நாளை சனிக்கிழமையுடன் (31) ஓய்வு பெற்றுபவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான அரச அதிகாரிகளும் உயர் பதவிகளை வகிக்கிப்போரும் உள்ளடங்குவதாகவும் தெரியவருகிறது. 

No comments

Powered by Blogger.