Header Ads

முஸ்லிம்கள் எவ்வித நுால்களையோ, அல்குர்ஆனையோ வெளிநாட்டிலிருந்து தருவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


 (அஷ்ரப் ஏ சமத்)


தமிழ் நாடு சட்ட மன்ற உறுப்பிணா் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா வின் - நபிகளாரின் சமூக உறவு எனும் இன்று முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா் தலைமையில் நடைபெற்றது.


தலைமை உரையை மீடியா போரத்தின் ஆலோசகா் என்.எம். அமீன் பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணி யுமான அலி சப்ரி,  சிறப்புப் பேச்சினை  தேசியத் தலைவா் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் -முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன், கௌரவ அதிதிகளான  - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் றிசாத் பதியுதீன் நூலின் முதல் பிரதியை  முஸ்லிம் ஸலாஹுத்தீன்  சிறப்புப் பேச்சினை - காலைக்திா் ஆசிரியா் என். வித்தியாதரன் . 


ஏற்புரை நுாலாசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர். ஆகியோா்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்


இந்நிகழ்விற்கு இந்தியாவில் இருந்து  பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் தலைமையில்  இலங்கை வந்த குழுவில் ஏனைய ஏழு  பேரும்  கலந்து கொண்டனா். 


இவ் வெளியீட்டு விழாவில்  தலைமை உரை நிகழ்த்திய என்.எம்.அமீன் -  


இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் , அமைச்சா்கள் ஒன்றினைந்து  இலங்கையில் முஸ்லிம்கள்  எவ்வித நுால்களையோ அல்குர்ஆன் பிரதிகளையோ வெளிநாட்டிலிருந்து தருவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நுாலசிரியரின் 200 நுால்களை இவ் விழாவுக்கு இந்தியாவிலிருந்து விமானமூலம் அனுப்பப்பட்ட நுாலைப் பெற்றுக் கொள்ள   நாங்கள் பாரிய பிரச்சினைகளை எதிா்நோக்கினோம்.  அதுவும் எமது உலகத்தலைவா் நபிகள் பற்றிய தமிழ் நுாலொன்றை நாம் விமான நிலையம் ஊடாக எடுக்க முடியாத நிலை  இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் இலங்கை முஸ்லிம்களுக்கு இத் தடை  விதிக்கப்பட்டதாகும்..


இந் நுாலின் 3 பிரதிகளை முன்  பாதுகாப்பு அமைச்சுக்குக் கொடுத்தல் வேண்டும். அதன் பின்னா் அதனை முஸ்லிம் சமயஅலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட நுால் ஆரய்ச்சிக்  குழு அதனை படித்து அனுமதியோ அல்லது  சிபாா்சு பௌத்த சாசன அமைச்சுக்கு வழங்குதல் வேண்டும். அதனை பாதுகாப்பு அமைச்சு அனுமதித்து விமானநிலையத்தில் உள்ள சுங்கத்திணைக்களத்திற்கு வழங்குவதற்கு  கடிதம் பெறப்படல்  வேண்டும் அதன் பின்னரே நாங்கள் குறிப்பிட்ட நுாலை விமான நிலையத்திலிருந்து பெறமுடியும். 


 ஊடகச் சங்கமொன்றுக்கே ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு  இந்தியாவிலிருந்து அனுப்பிவைத்த  நுாலொன்றைப் பெறுவதற்கு நாங்கள் கடந்த ஒரு மாத காலமாக மிகவும் கஸ்டத்தினை எதிா்நோக்க வேண்டியுள்ளது. அவ்வாறாயின் சாதாரன முஸ்லிம்கள் இளம் மாணவா்கள்  தனக்குத் தேவையான இஸ்லாமிய  நுாலொன்றையோ குர்ஆனையோ  வெளிநாட்டிலிருந்து அல்லது இந்தியாவில் இருந்து எவ்வாறு தருவிப்பது. ? 


ஆகவேதான் இவ்விடயத்தினை இவ் விழாவிற்கு வருகை தந்துள்ள அமைச்சா் அலி சப்றி, மற்றும்  அரசியல் தலைவர்கள் கவனத்திற்கு இவ்விடயத்தினை கொண்டுவருகின்றேன்.   அந்நோக்கத்திற்காக கற்பதற்கு தேவையான நூல்களை இறக்குமதி செய்வதில் உள்ள  தடைகளை நீக்குமாறு அவா்  வேண்டிக் கொண்டார்.     அத்துடன் இந்தக் அல் குர்ஆனை சுமந்து   ஓதிய இளம்  நுாற்றுக்கணக்கான வாலிபா்கள் சிறையில் வாடுகின்றாா்க்ள. அவர்களது பெற்றோர்கள் தமது மகனை விடுவிப்பதற்காக நீதிமன்றம் ,சிறைச்சாலை மற்றும் சட்டத்தரணிகளை நாடியும் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். என்பதை கவலையாக கூறினாா். என்.எம். அமீன்.

No comments

Powered by Blogger.