Header Ads



செம்மஞ்சள் நிற சேலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் - பாலின வன்முறை எதிர்ப்பு கைப்பட்டியும் அணிவிப்பு (படங்கள்)


பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (01) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 


இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தனர்.


இதன் ஒரு அங்கமாக "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்களால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்களுக்கு அணிவிக்கபட்டது. 


இந்நிகழ்வில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார். பெண்கள் தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவில் பூர்த்திசெய்து அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.





No comments

Powered by Blogger.