Header Ads



கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்த நீதிபதி


வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கணவனையும் மனைவியையும் வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் தங்க நகைகளை திருடியமை தொடர்பில் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில், குறித்த வழக்கு தீர்ப்பிற்கு அழைக்கப்பட்டது. குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதால், அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 


கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டாவது பிரதிவாதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


பன்றிக்கெய்தகுளத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கணவனும் மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.


சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.


தொடர் விசாரணைகளின் பின்னர் முதலாவது சந்தேகநபரே கொலைக் குற்றவாளி என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

 

1 comment:

  1. இந்த இரட்டைக் கொலை வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்கள் வழங்கிய தீர்ப்பு பற்றி மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ஒரே கொலைகாரன் இரண்டு பேரை அநியாயமாகக் கொலை செய்து அவர்களுடைய தங்க நகைகளையும் களவாடிச் சென்ற குற்றம் பூரணமாக நிரூபிக்கப்படவே இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் ஒரு கொலைகாரனை இரண்டு முறை கொலை செய்ய முடியுமா என்றால் அதன் விடை முடியாது என்பதுதான். ஆனால் இந்த நாட்டில் உள்ள சட்டத்தின் உச்ச சட்டத்தீர்ப்பை மாண்புமிகு நீதிபதி அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். அது தவிர நீதியில் அதற்கு மேல் செல்ல யாருக்கும் முடியாது. இந்த இடத்தில் தான் மனித சட்டங்களையும் இறைவனின் சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கின்றது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொலைகளைச் செய்த கொலைகாரனுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனையை அல்குர்ஆன் மிகவும் இரத்தினச் சுருக்கமாகக் கூறுகின்றது. இறைவன் ஒருமுறை கொலைகாரனைக் கொலை செய்துவிட்டு மீண்டும் அவனுக்கு உயிர் கொடுத்து எவ்வாறு அந்தக் கொலைகாரன் அப்பாவி மனிதனைக் கொலை செய்தானே அது போல் பன்மடங்கு வேதனையையும் துன்பத்தையும் கொடுத்து அவனை மீண்டும் கொலைசெய்வான், அதன்பிறகு அவன் மீண்டு உயிர்ப்பிக்கப்படுவான், இந்த இறைவனின் தண்டனை மிகவும் நீதியானதும் மிகவும் நியாயமானதுமாக இருக்கும். இறைவன் மக்களுக்கு மத்தியில் எந்த வேறுபாட்டையும் காட்ட மாட்டான். யாருக்கும் அவன் அநியாயம் செய்யமாட்டான். ஆனால் மனிதர்கள் குறிப்பாக இறைவனுக்கு இணைவைத்தல், கொலைசெய்தல், விபச்சாரம் செய்தல் இந்த மூன்று பாரதூரமான பாவச் செயல்களுக்கும் உலகிலும் மறுமையிலும் இழிவான, மிகவும் மோசமான, கடுமையான தண்டனைகளை வழங்குவதாக அல்குர்ஆனில் ஸூரா அல் புர்கானில் மிகத் தௌிவாகத் தெரிவித்திருக்கின்றான். அது சத்தியம், அதுவே சத்தியம் அதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. இந்த மூன்று இணைவைத்தல், கொலைசெய்தல்,விபசாரம் செய்தல் மூன்று பாவங்களிலும் மனித இனம் ஈடுபடவே கூடாது என்பதை மிகவும் எச்சரிக்கையாக இறைவன் கூறுகின்றான். அந்த எச்சரிக்கையையும் மீறி மனிதன் மரணமுரண்டாக இணைவைத்தல், கொலை, விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவனுக்கு இந்த உலகவாழ்க்கையில் நிச்சியம் இழிவும் அவமானமும் இறைவனின் தண்டனையும் காத்திருக்கின்றது. அதே போல அதைவிடப் பன்மடங்கு பயங்கரமான தண்டனை மறுமையில் காத்திருக்கின்றது. எனவே இந்த மனித சமுதாயத்துக்கு எனது பணிவான வேண்டுகோள், எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் இறைவனுக்கு இணையான மற்றொரு கடவுள் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தால் உடனடியாக அதற்கு பச்சதாபப்பட்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு உங்கள் பாவத்துக்கு உடனடியாக இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். அதே போல் ஏதோ ஒரு தவறான செயல் காரணமாக உங்கள் கையால் கொலை நடைபெற்றிருந்தால் உடனடியாக இறைவனிடம் மீண்டு அந்த பாரிய குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இஸ்லாமிய சட்டத்தில் வரையறைசெய்யப்பட்டுள்ள தியத் அல்லது BLOOD MONEY சரியாகச் கொடுத்துவிட்டு இந்த மாதிரியான கொடுமை, பாவத்தை மீண்டும் செய்யமாட்டேன் என உறுதி பூண்டு மரணம் வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். அதேபோல விபசாரம் அல்லது ஸினாவின் பக்கம் நெருக்கவோ அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவோ வேண்டாம் என அல்குர்ஆன் எச்சரிக்ைக செய்கின்றது. தவறாகவேனும் அந்த படுபாவத்தை நீங்கள் செய்திருந்தால் உடனடியாக தவ்பா செய்து மீண்டும் அந்தப் பாவத்தை செய்யமாட் டேன் என உறுதி பூண்டு உறுதியாக இருங்கள். உங்கள் அனைவருக்கும் அருள்பாலிக்க இறைவன் போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.