பாடசாலையில் இருந்து ஐஸ், போதைப்பொருள் மீட்பு - பெண் கைது
பாடசாலை ஒன்றின் சிற்றூண்டிச் சாலையில் இருந்து 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிற்றூண்டிசாலையை நடத்தி வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
Post a Comment