Header Ads



பல்டியடித்த நிமலுக்கு ஏமாற்றம்


சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை இடைநிறுத்தியதை செல்லுபடியற்றது என்று அறிவிக்குமாறு கோரி அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா முன்வைத்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியமை மற்றும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்தமை காரணமாக நிமல் சிரிபால டி சில்வா உள்ளிட்ட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவத்தை சுதந்திரக் கட்சி இடைநிறுத்தியுள்ளது.


இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பதவியில் இருந்தும் அங்கத்துவத்தில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


குறித்த மனு மீதான விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்ட போது கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமகே அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த பல்டிக்காரன்களை இவர்கள் செய்யும் அநியாயம், களவு, இலஞ்சம் காரணமாக இவர்களை அசுத்தக் குழிக்கு தூக்கியெறியும் பணி இறைவனின் ஏற்பாட்டால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இது போன்ற பாவிகள் நிச்சியம் இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் கறுப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டு இந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சைத்தான்களாக பதியப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.