Header Ads



போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்


ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து நீதிவான்களுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.


அத்தகைய போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை முடிந்தவரை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு  மையங்கள் அல்லது சமூக திருத்த நிலையங்களுக்கு அனுப்புமாறு நீதிச் சேவை ஆணைக்குழு நீதிவான்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.


இதேவேளை, போதைக்கு அடிமையானவர்கள் சிறைச்சாலைகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுவதனால் சிறைச்சாலைகளின் உள்ளகக் கட்டுப்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகளில் ஒழுக்கத்தை பேணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நீதி அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ​போதைப் பொருளுடன் கைது செய்யப்படும் அத்தனை பேரையும் நீர்கொழும்பு பா.உ.லன்ஸாவின் வீட்டுக்கு அனுப்பி லன்ஸாவின் புனர்வாழ்வில் வைக்குமாறு உத்தரவிட்டால் அதுதான் பொறுத்தமாக இருக்கும். அந்த போதைப்பொருள் அடிமைகளை பொதுமக்களின் செலவில் வாழவைப்பது வீணான, அநியாயமான செலவாகும். அதனை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.