Header Ads



முஸ்லிம் சமூகத்தை சீரழிக்கும் ஐஸ் - பச்சிளம் குழந்­தையை வீசிக்கொன்ற பரி­தாபம்


- எஸ்.என்.எம்.சுஹைல் -


கொழும்பு – கிராண்ட்பாஸ், சம­கி­புர மாடி­வீட்டுத் தொகு­தியின் மூன்றாம் மாடி­யி­லி­ருந்து ஒன்­றரை வய­தே­யான ஆண் குழந்­தையை ஜன்னல் வழி­யாக வெளியே வீசி­யதில், தரையில் விழுந்த குழந்தை பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் கடந்தவாரம் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. மறுபக்கம் பல­ருக்கும் இந்த சம்­பவம் பெரும் அச்­சத்­தை ஏற்­ப­டுத்­தி­யது.


இந்­நி­லையில், இவ்­வி­டயம் தொடர்பில் குறித்த குடும்­பத்­தா­ருடன் கதைத்து, அன்று என்ன நடந்­தது? சம்­ப­வத்தின் பின்­னணி என்ன? என்­பது தொடர்பில் அறிந்­து­கொண்டோம்.


நவம்பர் 25 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை, பர­ப­ரப்­பான காலை­ப்பொ­ழுது. மொஹமட் பாஷில் (வயது 35) தொழி­லுக்குச் செல்ல ஆயத்­த­மாகிக் கொண்­டி­ருந்தார். கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் வீட்­டுக்குள் செவியுற்ற ஒரு வார்த்தை ஏதோ ஒரு­வகை சஞ்­சலம் அவரை ஆட்­கொண்­டி­ருந்­தது. இதனால் அவ­ரு­டைய 6 வய­தான மூத்த மகன் சுஹைலை அன்று பாட­சா­லைக்கு அனுப்­பவும் இல்லை. சுஹைலும் இரண்­டா­வது மகன் யாகூபும் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தனர். பாஷில் வீட்­டி­லி­ருந்து தொழி­லுக்காக செல்லும் போது மூன்றாவது பிள்ளையான ஒன்­றரை வய­து­டைய யூசுப் தூங்கிக் கொண்­டி­ருந்தார். இன்­மு­கத்­துடன் உறங்­கிக்­கொண்­டி­ருந்த குழந்­தையின் முகத்தை இறு­தி­யாக பார்க்கும் சந்­தர்ப்பம் அதுதான் என்று அவர் நினைத்­துக்­கூட பார்க்­க­வில்லை. வீட்டு வர­வேற்­ப­றையில் மைத்­துனர் இம்­ரானும் (மனைவியின் மூத்த சகோதரன்) மாம­னாரும் (மனை­வியின் தந்தை) உறங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தையும் அவ­தா­னித்­த­படி, மகனிடம் காலை உணவுகளையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவ­ச­ர­மாக புறக்­கோட்­டைக்கு தொழி­லுக்­காக புறப்­பட்டுச் சென்றார் பாசில்.


குழந்­தையின் தாய் 30 வய­து­டைய பாத்­திமா சுமையா அறையில் குழந்­தை­யுடன் இருந்தார். ஏற்­க­னவே இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் சுமை­யா­வி­ன் ச­கோ­தரன் இம்ரான், தமது இளைய பிள்­ளையை தூக்கி எறிந்து விடப்­போ­வ­தாக கூறிய விடயம் உள்­ளத்­துக்குள் நச்­ச­ரித்­துக்­கொண்­டி­ருக்க, குழந்­தை­யுடன் அதி­க­மான நேரத்தை செல­வ­ளித்தார். முன்­றலில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த மூத்த பிள்­ளை­களை ஒரு கணம் பார்த்து விட்டு வர அறையி­லி­ருந்து வெளி­யே­றினார். தாய் சுமையா அறையைவிட்டு வெளியில் சென்ற மறு­க­ணமே அறைக்குள் வந்த இம்­ரான குழந்­தையை தூக்கி ஜன்­னலால் வெளியே வீசி­யி­ருக்­கிறார்.


அப்­போது காலை 9.10 இருக்கும். ஒன்­றுமே தெரி­யாத குழந்­தையின் துர­திஷ்ட நேரம் அது. மூத்த பிள்­ளைகள் அறைக்குள் வந்து குழந்­தையை காண­வில்லை என உம்மா (சுமையா) விடம் கூற, தான் குழந்­தையை ஜன்­னலால் வீசி­விட்­ட­தாக கூறிய இம்ரான், எந்த சஞ்­ச­லமும் இல்­லாமல் வேலைக்குச் செல்­வ­தாக வீட்­டி­லி­ருந்து கிளம்ப முயற்­சித்­தி­ருக்­கிறார்.


மூன்றாம் மாடி­யி­லி­ருந்து தரையில் விழுந்த குழந்­தையை எடுத்த அய­ல­வர்கள், உட­ன­டி­யாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லைக்கு முச்­சக்­கர வண்­டியில் எடுத்துச் சென்­றுள்­ளனர். அத்­தோடு, அங்­கி­ருந்து தப்பிச் செல்ல முயற்­சித்த இம்­ரானை பிடித்து பொலிஸில் ஒப்­ப­டைத்­துள்­ளனர் அய­ல­வர்கள்.


இந்த சந்­தர்ப்­பத்தில் குழந்­தை யூசுப் ஜன்னலால் வீசி எறியப்பட்டதாக குழந்­தையின் தந்தை பாஷி­லுக்கு செய்தி கிடைக்­கி­றது. அதிர்ச்­சிக்­குள்­ளான பாஷில் வேகமாக வீட்­டுக்கு திரும்­பி­ய­போது, குழந்தை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளது. அத்­தோடு, மனைவி பாத்­திமா சுமையா வாக்கு மூலம் அளிப்­ப­தற்­காக பொலி­ஸுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருந்தார். பாஷில் உடனே பொலி­ஸுக்கு சென்­ற­போது, வாக்­கு­மூலம் அளித்த மனை­வி­யையும் அழைத்­துக்­கொண்டு வைத்­தி­ய­சா­லைக்கு செல்­கின்­றனர்.


எப்­போதும் அவ­சர நிலை­மையில் இருக்கும் சீமாட்டி ரிஜ்வே வைத்­தி­ய­சாலை இந்த சம்­ப­வத்தால் மேலும் பர­ப­ரப்­ப­டைந்­தி­ருந்­தது. வேக­மாக ஓடிக்­கொண்டு வந்த பாஷி­லையும் சுமை­யா­வையும் வைத்­தி­ய­சாலை காவ­லர்கள் தடுக்­கின்­றனர். “நான், ஜன்­னலால் வீசப்­பட்டு வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள குழந்­தையின் தந்தை” என அறி­முப்­ப­டுத்­திக்­கொண்ட பாஷிலை தனியே அழைத்துச் சென்­றனர் வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள்.


“குழந்­தையின் தலையில் பல­மாக அடி­பட்­டுள்­ளது. குழந்தை உயி­ரி­ழந்து 45 நிமி­டங்­க­ளா­கின்­றன” என்று வைத்­தி­யர்கள் கூறி­யது இன்னும் காதுக்குள் பேரி­டி­யாக ஒலிப்ப­தாக கூறுகிறார் பாஷில்.


“பின்னர் குழந்­தையை பார்த்தேன். அதிர்ந்து போனேன். நாடிப் பகு­தியில் சிறு வெடிப்பு காயம் இருந்­தது. மற்­றப்­படி உடலில் எந்த வெளிக் காயமும் தெரியவில்லை. என்னால் இந்த சம்­ப­வத்தை ஜீர­ணிக்க முடி­ய­வில்லை. மனை­வியும் மிகுந்த வேத­னை­யுடன் இருந்தார்” என கூறு­கிறார் பாஷில்.


“அள­வுக்­க­தி­க­மான ஐஸ் போதை பாவ­னைக்கு இம்ரான் ஆளாகி இருக்க வேண்டும். அவர் வீட்டில் இருக்­கின்­ற­போது எப்­போதும் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வ­துண்டு. கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் எனது பிள்­ளையை தூக்கி எறி­யப்­போ­வ­தாக கூறி­யி­ருந்தார். இந்­நி­லையில், நான் மனைவி, பிள்­ளை­களை அழைத்­துக்­கொண்டு மல்­வா­னைக்கு சென்­று­விட எதிர்­பார்த்­தி­ருந்தேன். சம்­பவ தினத்­தன்று காலையில் எனது மனை­வி­யிடம் இது பற்றி கதைத்­துக்­கொண்­டி­ருந்தேன். தூங்­கு­வ­துபோல் நடித்துக்கொண்டிருந்த இம்­ரானின் காதில் இது விழுந்­தி­ருக்க வேண்டும்” என மிகவும் மன­வே­த­னை­யுடன் கூறினார் குழந்­தையின் தந்தை.


சந்­தேக நப­ரான 35 வய­து­டைய நவாஸ் முஹம்மத் இம்ரான், அதீத ஐஸ் போதைப் பொருள் பாவனை கார­ண­மாக உள­வியல் ரீதியில் பாதிக்­கப்­பட்டு அங்­கொட மன­நல மருத்­து­வ­ம­னையில் ஏற்கனவே சிகிச்சை பெற்­றுள்ளார். இவர் திரு­ம­ண­மாகி விவ­கா­ரத்து பெற்­றவர் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.


“இந்த சம்­ப­வத்­தை­ப் பற்றி ஒவ்­வொ­ரு­வரும் வெவ்­வேறு வித­மாக பேசிக்­கொள்­கின்றனர். எல்­லோரும் கூறு­வது போல் எனது மகன் இம்ரான் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­னவன் அல்ல. அவர் உள­வியல் ரீதியில் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்” என்றார் இம்­ரானின் தந்தை முஹம்­மது நவாஸ்.


எது எப்­ப­டியோ, பத்து மாதம் எத்­த­னையோ கஷ்­டங்­களை சந்­தித்து சுமந்து, 18 மாதங்கள் தோளிலும் மார்பிலும் சுமந்து வளர்த்த பால்­குடி மறவா குழந்­தையை இழந்­தி­ருக்­கிறார் தாய் சுமையா. அதுவும் தன் உடன் பிறந்த சகோ­த­ரனின் செயற்­பாட்­டினால் இந்த பேர­திர்ச்­சியான அசம்­பா­விதம் ஏற்­பட்­டமை அவ­ருக்கு பல வகை­யிலும் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.


குரு­விக்­கூ­டுபோல் காத்து வந்த குடும்­பத்தில் இளம் பிஞ்­சொன்றை இழந்த வேத­னையில் தந்தை பாஷில் மிகுந்த மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருக்­கிறார். தம்­பியை இழந்த துயரம் முத்த சகோ­த­ரர்­க­ளான சுஹை­லையும் யாக்­கூ­பையும் ஆட்­கொண்­டி­ருக்­கி­றது.

தமது ஒரு பிள்­ளையின் செயற்­பாட்டால் தமக்கு பிறந்த இன்­னொரு பிள்­ளையின் குழந்தை (பேரப்­பிள்ளை) உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றமை நவாஸ் தம்­ப­தி­யி­னரை மிகுந்த குழப்­ப­க­ர­மான துய­ரத்தில் ஆழ்த்­தி­யி­ருக்­கி­றது.


போதைப்­பொருள் பாவனை இந்த குடும்­பத்தை படு­மோ­ச­மான முறையில் சிதைத்­தி­ருக்­கி­றது. நாட்டில் ஐஸ் போதைப்­பொருள் பாவனை அன்மைக்காலமாக பன்மடங்கு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. அதிலும் குறிப்­பாக இளை­ஞர்கள், ஏன் யுவ­தி­களும் கூட இந்த போதைக்கு அடி­மை­யாகி சீர­ழிந்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.


ஐஸ்­போ­தைப்­பொருள் பாவ­னைக்கு எதிரான நட­வ­டிக்­கைகள் குறித்து பள்­ளி­வா­சல்கள் கவனம் செலுத்த வேண்டும் என கடந்த வாரம் கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க முஸ்லிம் சமூ­கத்­திடம் வேண்­டி­யி­ருக்­கிறார்.

எமது சமூகக் கட்­ட­மைப்பில் பாரிய சரி­வொன்று ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­மையை கிராண்பாஸ் சம்பவம் தெட்டத் தெளிவாக சொல்கிறது.


எனவே, இது விடயமாக பள்ளிவாசல்கள், இஸ்லாமிய தஃவா அமைப்புகள், முஸ்லிம் சமூக தொண்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.- Vidivelli

No comments

Powered by Blogger.