Header Ads



நான் சிறையில் ஓய்வுடன், மகிழ்ச்சியாக இருந்தேன் - எதிர்காலம் பற்றி எந்தக் கவலையும் இல்லை - திலினி


நான் சிறையில் ஓய்வுடன் - மகிழ்ச்சியாக இருந்தேன் - பிணையில் விடுவிக்கப்பட்ட திலினி 04 பில்லியன் ரூபாய்கும் அதிகமான நிதி மோசடிகளில் ஈடுபட்டு கடந்த 03 மாதங்களாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த திகோ குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலினி பிரியமாலி இன்று மாலை ( 27 ) கொழும்பு விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளார் . 


கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் விதித்த சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார் . வைத்திருந்ததாக திலினி பிரியமாலி நிதிக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது , இரண்டு தடவைகள் சட்ட விரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் , அது தொடர்பில் சிறைத்துறையினரால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது . 


குறித்த வழக்கிற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் பிணை வழங்கியதுடன் இன்று பிற்பகல் திலினி பிரியமாலி சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டார் . இதன்படி அவர் 8 வழங்குகளுக்கான பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார் . திலினீ பிரியமாலிக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான 08 சரீரப் பிணைகளும் , தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சரீரப் பிணைகளும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 


இதனிடையே , சிறையில் இருந்து வெளிவந்த திவினி பிரியமாலி தான் சிறைச்சாலையில் ஓய்வாகவும் , மகிழ்ச்சியாகவும் இருந்ததாக குறிப்பிட்டார் . 


ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு , தன்மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளதன் காரணமாக அதுகுறித்து கருத்து வெளியிட முடியாது . அத்துடன் , நான் செய்த மற்றும் செய்யாத தவறுகளைக் கொண்டு ஊடகங்கள் என்மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து விட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டும் . 


அவர்களே நான் குற்றவாளி என தீர்ப்பளித்து விட்டனர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் கட்டாயமாக குற்றவாளியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை . அவர் சந்தேக நபராகவோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவராகவோ இருக்கலாம் . எனது எதிர்காலம் பற்றி எந்த கவலையும் இல்லை . பாதிப்புகள் எதுவும் இல்லை

No comments

Powered by Blogger.