Header Ads



தூசிகள், குளிரால் உயர்ந்துசெல்லும் நோய்கள்


தற்போதைய நாட்களில் கடுமையான குளிர் மற்றும் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.


2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், நீண்டகால சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர் இந்த நேரத்தில் தங்கள் உடல் நலம் குறித்து அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும்  தெரிவித்தார்.


இந்த நாட்களில் அஸ்துமாவுக்கு எடுக்கப்படும் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்றும், இன்ஹேலர் பயன்படுத்தும் நோயாளிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையின் பேரில் அதையும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.