Header Ads



அவுஸ்திரேலியாவில் முதல் தடவையாக, இலங்கையருக்கு வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம்

 
சிம்பாப்வேவுக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த தூதுவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மினோலி பெரேராவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது . 


அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுடன் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கான்பெராவில் நடத்திய ஊடக சந்திப்பின்போது , அவர் இதனைத் தெரிவித்தார் . 


கொங்கோ , மலாவி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளுக்கும் மினோலி பெரேரா அவுஸ்திரேலியாவின் தூதராக பணியாற்றவுள்ளார் . 2018 முதல் ஹராரேவிலுள்ள அஸ்திரேலிய தூதகத்தின் உயர்மட்ட இராஜதந்திரியாக இவர் பணியாற்றிவந்துள்ளார் . 


மினோலி பெரேரா , வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியாகவும் , பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் , மிக அண்மையில் நிறைவேற்றுப் பிரிவின் முதல் உதவிச் செயலாளராகவும் பதவி வகித்தார் . அவர் முன்னதாக பெய்ஜிங் போர்ட் மோர்ஸ்பி , நியூயோர்க் , புவனஸ் அயர்ஸ் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். 


இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலிய தூதுவராக நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது .

1 comment:

  1. அவுஸ்ரேலியாவின் முன்னேற்றத்தின் இரகசியம் இங்கு தான் தங்கியிருக்கின்றது. நாட்டின் முன்னேற்றத்துக்கும் எழுச்சிக்கும் உழைக்கும் திறமையும் ஆற்றலும் உடைய நபர்களைத் தெரிவு செய்யும் போது அந்த தெரிவுகளில் அவர்கள் அடிப்படையில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விடயத்தை அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் கருத்தில் கொள்வதில்லை. இலங்கை போன்ற பிற்போக்கான குறுகிய, அற்ப துவேச சிந்தனை கொண்ட நாடுகள் தான் உரிய நபர்களின் மூலத்தையும் இனத்தையும் கருத்தில்கொண்டு தான் அவர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது. அதன் விளைவு உயர்பதவிக்குத் தெரிவு செய்யப்படுபவர்கள், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற இனத்துவேசம் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய அழிவாகும். இதுபோன்ற அவுஸ்ரேலியாவின் முன்மாதிரியை இலங்கை போன்ற நாடுகள் உண்மையாகவே பின்பற்றினால் முன்னேற்றத்தின் ஆரம்பநிலையைக் கூட அடையும் வாய்ப்பு உண்டு. அது நிறைவேறுமா?

    ReplyDelete

Powered by Blogger.