இலங்கையில் கண்குளிர்ச்சியான காட்சி
மாலை நேர வகுப்பை முடித்துவிட்டு வீடு செல்லும் வழியில் காத்தான்குடி 02, ஹிழுறிய்யா பள்ளிவாசலில் இஷா தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுகின்ற தரம் 05 மாணவ நண்பர்கள்.
இந்த வயதில் இந்த சிந்தனை இறைவனின் பேரன்பு அன்றி வேறில்லை.
பள்ளி பேஷி இமாம் அல் ஹாஃபிழ் நௌசர் மௌலவி கூட்டிச்சென்று காட்டினார்.
நல்ல செயல்களை உடனுக்குடன் பாராட்ட வேண்டும்.
பாராட்டப்படும் சிறிய விடயங்கள் கூட, பழக்க வழக்கமாக மாறிவிடும்.
கையில் ஃபோன் இருக்கவில்லை. கிடைத்த போனை வைத்துக் க்ளிக் செய்தவை இவை.
தொழுது முடித்ததும், அவர்களின் இச்செயலைப் பாராட்டி கைலாகும் செய்துகொண்டேன்.
அவர்கள் அதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனந்தம் முகத்தில் தெரிந்தது.
அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை வீட்டிலுள்ள சிறுவர்களுக்குங் காட்டி ஒப்பிட்டுப் பேசி உள்ளத்தை உடைக்காமல் ஊக்கப்படுத்தப் பயன்படுத்தலாம்.
யா அழ்ழாஹ் இவர்களுக்கும், இவர்களின் பெற்றோருக்கும் அவர்களின் இம்மை, மறுமை இரு வாழ்விலும் பரக்கத் செய்வாயாக.
உன் பரக்கத் நிறைந்த அறிவையும், ஞானத்தையும் இவர்களுக்கும் அருள்வாயாக.
ஆமீன் 🤲
முஹம்மத் ஸன்ஸீர்.
20.12.2022, செவ்வாய்.
Post a Comment