Header Ads



தண்ணீருக்குப் பயந்து பைத்தியக்கார நாய்களைக் குளிப்பாட்ட முடியாது - எதிர்க்கட்சித் தலைவர்


மொட்டு ஒன்று சேர்ந்து ஜனாதிபதிக்கு கிண்ணம் வழங்கி மொட்டு தொப்பி அணிந்துள்ளதாகவும்,  அவர்கள் இருவரும் இப்போது இரு தரப்பல்ல ஒரே தரப்பெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


குருநாகல் மாவட்டம் பிங்கிரிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று(17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானியும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார அவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.


மொட்டுவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதுள்ள ஆட்டம் கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான ஆட்டமே என  தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

ஆட்சியதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள இருதரப்பும் ஒன்றிணைய முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தண்ணீருக்குப் பயந்து பைத்தியக்கார நாய்களைக் குளிப்பாட்ட முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதேபோன்றே,தேர்தல்களுக்கு பயந்த அரசாங்கத்தை தேர்தலுக்கு அழைத்துச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு தெரிந்த,கூறும் அனைத்து சதிகளையும் அரசாங்கம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஏற்றுக் கொள்ளத்தக்க காரணம் ஏதும் இல்லாவிட்டால் காலநிலை காரணத்தைக் கூட கூறி தேர்தலை ஒத்திவைப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


போலிக் கூட்டணியில் சேர்ந்து நாட்டை சீரழிப்பதற்குப் பதிலாக,தூய அணியுடன் இணைந்து இலங்கை 1st நிலைக்கு ஸ்தானப்படுத்த அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.