Header Ads



சுனாமியினால் உயிரிழந்தவர்களுக்காக விஷேட துஆ பிராத்தனை


(எம்.என்.எம்.அப்ராஸ்,  நூருல் ஹுதா உமர்)


சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன்18வருடங்கள் பூர்த்தியாகின்றன.


நாட்டில் கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின்18வது ஆண்டு நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நிர்வாக சபை இணைந்து ஏற்பாடு செய்த  கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு,விஷேட துஆ பிராத்தனை கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இன்று(26)காலை இடம்பெற்றது.


2


நாட்டில் கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி, ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், சாய்ந்தமருது  வொலிவேரியன் ஹிஜ்ரா மஸ்ஜிதில் (26) இன்று இடம்பெற்றது.


அந்த வகையில் சுனாமியால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது  வொலிவேரியன் கிராமத்தின் ஹிஜ்ரா மஸ்ஜிதில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வும்  விஷேட துஆ பிராத்தனையும் பள்ளிவாசலின் தலைவர் அல்-ஹாஜ்  ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.