Header Ads



பாணின் விலையை பெரும்பாலான பேக்கரிகள் குறைக்கவில்லை


ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்த போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் பாணின் விலையைக் குறைக்கவில்லை.


நேற்று முன்தினம் (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்தது.


ஒரு இறாத்தல் பாண் ரூ.180.00 முதல் ரூ.200.00 வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.


உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் ஒரு இறாத்தல் பாண் விலையை பத்து ரூபாவால் குறைக்க முடியாது என பல பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


பாண் விலை அதிகரிப்பால் பாண் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். TL

No comments

Powered by Blogger.