Header Ads



தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றும் திட்டம் தோல்வி


(பீ.எம்.அன்வர்)


தம்­புள்ள பள்ளிவாசலை அகற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட புனித பூமி திட்டத்தின் ஆரம்பக் கட்­ட­மான மாற்றுப் பாதை அமைக்கும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.


ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் கட­னு­தவித் திட்­டத்­தின்கீழ் கண்­டி-­ யாழ்ப்­பாணம் ஏ-9 வீதியின் நாவுல தம்­புள்ள நகர வீதி அபி­வி­ருத்தித் திட்டப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் சில தரப்­பினரால் புனித பூமிப் பிர­தேசம் என குறிப்­பிட்டு புதிய மாற்­றுப்­பாதை அமைக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எனினும், பிர­தான பாதையின் அபி­வி­ருத்திப் பணி­களை தொடர்ந்து மேற்­கொள்­வ­தற்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக குறித்த வீதி அபி­வி­ருத்தி திட்­டத்தின் பிர­தம பொறி­யி­ய­லாளர் சஞ்­சீவ பர்­ணான்டோ தெரி­வித்தார்.


ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய தம்­புள்ள நக­ரி­லி­ருந்து ஏ-9 வீதி­யூ­டாக நாவுல- போபெல்ல நகரம் வரை­யி­லான வீதியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு மாத்­திரம் தமக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

அத்­தோடு, குறித்த புனித பூமி தொடர்பில் முயற்சி மேற்­கொள்ளும் அமைப்­பினர் குறிப்­பிடும் தம்­புள்ள விகாரை சந்­தி­யி­லி­ருந்து தம்­புள்ள நிஸங்க மாவத்தை வரை­யி­லான மாற்றுப் பாதை­களை அபி­வி­ருத்தி செய்­வது தொடர்பில் தமக்கு எவ்­வித ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் சஞ்­சீவ பர்­னான்டோ மேலும் குறிப்­பிட்டார்.


தம்­புள்ள விகா­ரைக்கு எதிர்ப்­பு­ற­மாக சுமார் 80 மீற்றர் தொலைவில் அமைக்­கப்­பட்­டுள்ள வாகன தரிப்­பிடப் பாதையை தம்­புள்ள பிர­தான வீதியின் நிஸங்க மாவத்­தை­யுடன் இணைப்­பதன் மூலம் ஜும்ஆப் பள்­ளியை அங்­கி­ருந்து அகற்­று­வதை இலக்­காகக் கொண்டே இந்த புனித பூமி திட்­டங்கள் நகர்த்­தப்­பட்டு வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.


இதே­வேளை இத்­த­கைய கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் தம்­புள்ள ஜும்ஆ பள்­ளியை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு முன்னர் புதிய பள்­ளி­வா­யி­லொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­கான காணி­யொன்று நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் ஒதுக்­கப்­பட்­டது. தம்­புள்ளை பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­திற்கு பின்­பு­றத்தில் ஒதுக்­கப்­பட்ட அக்­கா­ணியை துப்­பு­ரவு செய்யும் பணி­களை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் ஊழி­யர்கள் முன்­னெ­டுத்­தனர். எனினும், வீதி அபி­வி­ருத்தி அதிகார சபையினரால் ஏற்கனவே உள்ள ஏ 9 வீதியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புனித பூமி திட்டத்திற்கமைய தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றும் திட்டம் பின்னகர்த்தப்பட்டுள்ளது. – Vidivelli

No comments

Powered by Blogger.