Header Ads



இலாபத்தில் இயங்கும் 'டெலிகொம்' மை, தனியார் மயப்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்


இலாபத்தில் இயங்கும் "டெலிகொம்" நிறுவனத்திற்கு எதிரான அரசாங்கத்தின் கீழ்தர செயற்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அம்பலப்படுத்தினார்


கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரு வருடங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கா டெலிகொம்  நிறுவனம் முறையே 1,832 மில்லியன் ரூபா மற்றும் 657 மில்லியன் ரூபா என்றடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதோடு,குறித்த வருடங்களில் வரி செலுத்தியதன் பிற்பாடு முறையே 7,881 மில்லியன் ரூபாவையும், 12,161 மில்லியன் ரூபாவையும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் இலாபமாக ஈட்டியுள்ளது.


அவ்வாறே,ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் இருக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சேமிப்பது அரச துறை பொறுப்பின் கீழ் இருக்க வேண்டிய ஒரு பகுதியாகும்.


இருந்தபோதிலும்,இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.இதுபோன்ற இலாபம் ஈட்டும் நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வது சிக்கலாகவுள்ளது.


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும் போலவே தேசிய பாதுகாப்பிற்கும் வலுவான அச்சுறுத்தலாக அமையும்.


இவ்விவகாரம் குறித்து நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(13) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

1 comment:

  1. கூட்டாளி பேசிப் பேசி இருப்பார், கருத்துக்களையும் பாராளுமன்றத்துக்கு வௌியேயும் சத்தமிட்டு அவருடைய உறுதிப்பாட்டை வௌிப்படுத்துவார். ஆனால் இறுதியில் நடைபெற்றது புஷ்வானம் மட்டும்தான். ரணில் பேச்சைக்குறைத்து தந்திரமாக காய் நகர்த்தலை நுணுக்கமாக மேற்கொள்கின்றார். இறுதியில் ரணில் வெற்றி.

    ReplyDelete

Powered by Blogger.